Alternative to Petrol: Bajaj Chetak Electric Scooter Launched in Perambalur!
தற்போது உலகம் முழுவதும் பெட்ரோலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர், பைக்குகள், கார்கள் அதிக அளவில் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு விற்பனைக்கு வருகின்றன.
ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னோடியான பஜாஜ் கம்பனியும், தனது பங்கிற்கு சேட்டக் பிரிமியம், சேட்டக் அர்பன் என 2 வகையான புதிய இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே, சேட்டக் என்ற ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருந்தது. அதனை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அதன் பழைய பெயரிலேயே புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
இது நாள் வரை பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் சோதனை ஓட்டம் பெற்ற பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்கள் பழைய ஸ்கூட்டர்களை நினைவுப்படுத்தும் வகையில், அதே சேட்டாக் பெயரில் மெட்டல் பாடியில் உருவாக்கி உள்ளது. பெரம்பலூரில் லிங்கம் பஜாஜ் ஷோரூமில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு என தனியாக அமைக்கப்பட்ட ஷோரூமில் இன்று அறிமுக விழா லிங்கம் பஜாஜ் மேலாண் இயக்குனர் எல். வரதராஜன் தலைமையில் நடந்தது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அம்சங்களை விளக்கி பேசினார்.
ரோட்டரி இன்டர்நேசனல் டிஸ்டிரிக்ட் கவர்னர் ஜெ. கார்த்திக் பஜாஜ் சேட்டாக் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்தார். ராஜென் அன்ட் கோ சி. மதன்ராஜ் முதல் வாகன விற்பனையை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் செந்தூர் மெடிக்கல் டி.சுகுமார் வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, நியூ தனலட்சுமி ஸ்டோர்ஸ் ஆர்.பால்ராஜ், மெர்குரி பிரிண்டர்ஸ் கே.பாலமுருகன், கல்யாணி செட்டிநாடு மெஸ் எஸ். கார்த்திக், விஜயா ஸ்டீல்ஸ் தினகர், ஏ-ஒன் டிவி ஆ. துரைசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் , நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜெனரல் மேனஜர் ஜோதிராஜ், அக்கவுண்ட்ஸ் மேனஜர் தனலட்சுமி, ஷோரூம் மேனஜர் தீபக் செய்திருந்தனர்.