Ambedkar’s 127th birthday party in perambalur
பெரம்பலூரில் அம்பேத்கர் 127வது பிறந்த நாள் விழா : அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிப்பு!
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கும் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள அவரது உருவச் சிலைக்கு , திமுக, அதிமுக, ஓபிஎஸ் அணி, அதிமுக சசிகலா அணி, தீபா பேரவை, விடுதலை சிறுத்தைகள் மதச் சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ், பா.ஜ.க, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் நீதிக் கட்சி, பகுஜன் சமாஜ்வாடி, புரட்சி பாரதம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிராமங்களில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புதுப்பித்து வர்ணம் தீட்டப்பட்டது. பல கிராமங்களில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்படுகிறது.