Amidst the Thaipoosa festival celebrated at the Balathandayuthapani Temple near Namakkal

நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், தைப்பூசத்தை முன்னிட்டு, திருத்தேர் பெருவிழா வெகுவிமரிசையாக
கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா, கடந்த, 13ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, 8:00 மணிக்கு, அஷேகமும், இரவு, 7:00 மணிக்கு, அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, யானை, மயில் என, பல்வேறு வாகனங்களில், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
நேற்று, காலை, 10:30 மணிக்கு, சுவாமி திருத்தேரில் எழுந்தருனினார். சுவாமி திருத்தேர் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
எம்.எல்.ஏ.,க்கள் நாமக்கல் பாஸ்கர், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், மோகனுார் கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, காலை, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், பால், பன்னீர், புஷ்டம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து, சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. ராஜ அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம், தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை, உதவி ஆணையர் ரமேஷ், தக்கர் அம்சா ஆகியோர் செய்தனர்.
