Amma Mini Clinic at Thondapadi near Perambalur: MLAs open.
பெரம்பபலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தலைமையில் அம்மா கிளினிக் திறப்பு விழா நடந்தது. மாவட்ட நிலவள வங்கி தலைவரும், வேப்பந்தட்டை அதிமுக ஒன்றிய செயலாளருமான சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். விழாவில் அரசின் சுகாதார திட்டங்கள் குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி பேசினார். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துகள் அடங்கிய பரிசு பெட்டகம் மற்றும் மகப்பேறு கால உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் தொண்டப்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் பிரேம்குமார் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் கங்காதர் நன்றி கூறினார்.