AMMA Scheme is invited to apply for a three wheeler and to apply for women who are going to work

அம்மா மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியான வேலைக்குச் செல்லும் பெண் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

அம்மா மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்லும் மாற்றுத் திறனாளி மகளிருக்கு மூன்று சக்கர வாகனம் அரசு மானியத்துடன் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மகளிர் திட்டம் ஆகிய அலுவலகங்களில் இலவசமாக விநியோகம் செய்யப்படும்.

பயனாளிகள் நாமக்கல் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 8 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மூன்று சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராகவும் அதற்கான டிரைவிங் லைசென்ஸ் பெற்றவராகவும் இருக்க வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே பயன்பெற முடியும்.

மானியத் தொகையாக ரூ. 31 ஆயிரத்து 250 வழங்கப்படும். விண்ணப்பத்துடன் வயது சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், வேலை அளிக்கும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆண்டு வருமான சான்றிதழ், பணிபுரிவதற்கான சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, பயனாளிகள் பெற விரும்பும் மூன்று சக்கர வாகனத்துக்கான விலைப்புள்ளி ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆவணங்களை இணைத்து சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வரும் 31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது ஸ்பீடு அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!