An accident near Perambalur where people who came on a bike fell on their own: a teenager died! 2 injured!!
பெரம்பலூர் அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்த அழகர் (34), சின்னதுரை (34), பிரபு (25), ஆகிய 3 பேரும், சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் காரை செல்வதற்காக ஒரு பைக்கில் நேற்றிரவு சுமார் 9.30 மணி அளவில் சென்றுக் கொண்டிருந்தனர். அழகர் பைக்கை ஓட்டினார். நாரணமங்கலம் பிரிவு பாதை அருகே தானாக பைக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், பைக்கை ஓட்டி வந்த அழகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விபத்தில் சிக்கியர்களை மீட்டு,பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த அழகரின் உடல்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.