An unidentified vehicle collapsed near Perambalur, killing one’s legs and injuring one
பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை சுமார் 12.30 மணிளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி பிரிவு அருகே விபத்தில் சிக்கிய ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விபத்தில் சிக்கிய நபரை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் துரதிருஷ்டவசமாக கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இறந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதார் எண்ணில திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள திருவாலி நேதாஜி நகரை சேர்ந்த குருசாமி மகன் முனிஸ்வரன் (வயது 51) என உள்ளது. ஆனால், ஆதார் எண்ணில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உரிய பதில் கிடைக்கவில்லை.
மேலும், இறந்த நபர் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், இறந்தவரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கிடத்தி உள்ளனர். மேலும், விபத்தில் இறந்த நபர் வாகனத்தில் செல்லும் போது தவறி விழுந்து இறந்து போனாரா! அல்லது நடந்து போனாரா, வேறு ஏதேனும் திட்டமிட்ட கொலையா என்ற பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.