An unidentified youth was recovered as a dead body in front of Perambalur Government Hospital!
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முன்பு நிழற்குடை ஒன்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊர்? எதற்காக பெரம்பலூர் வந்தார்! என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.