AndhraPradesh, Karnataka as well as Tamil Nadu , diesel prices to reduce demand KMDK

கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை:

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை குறைத்தாவது பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைக்க வேண்டுமென்ற கூக்குரல் இந்தியா முழுவதும் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் ஆந்திரா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அம்மாநில முதலமைச்சர்கள் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.

மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா என்று தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலையேற்றம் தமிழகத்தில் லாரி தொழில்களை முடக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

வரலாறு காணாத இந்த விலையேற்றத்தால் தமிழக மக்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் தமிழக அரசும், தமிழக முதலமைச்சர் அவர்களும் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க உத்தரவிட வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!