Anganwadi worker, VCK in-charge arrested for falsely reporting jewel theft near Perambalur!
பெரம்பலூர் அருகே பைக்கில் சென்ற போது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் செயினை பறித்து விட்டதாக பொய் புகார் அளித்த பெண், விசிக பிரமுகர் உட்பட 3 பேரை கைது குற்ற விசாரணையில் கண்டுபிடித்து சிறைக்கு அனுப்பபி வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகள் மஞ்சுளா (40) அங்கன்வாடியில் பணியாளர். இவர் கடந்த 30.08.2023 -ம் தேதி கிருஷ்ணாபுரம் – வெங்கனூர் சாலையில் மதுரா பள்ளி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தனது 7 பவுன் தங்க சங்கிலியை அடையாளம் தெரியாத 2 நபர்கள் பறித்து சென்றதாக அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகார் கொடுத்தார்.
அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன் தலைமயிலான தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், மற்றும் செல்போன் அழைப்புகளையும் வைத்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இன்று கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் மஞ்சுளா என்பவர் தாமாகவே செயினை கழட்டி கொடுத்துவிட்டு பொய் புகார் அளித்தது தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த நல்லூசாமி மகன் கிருஷ்ணகுமார் (50), இவர் முன்னாள் பெரம்பலூர் மாவட்ட விசிக துணைச் செயலாளர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ராமநத்தம் கிராமத்தை சேர்ந்த பூபதி மகன் பரிதிஇளம்வழுதி (28) மற்றும் மஞ்சுளா (40) ஆகிய மூவரும் திட்டமிட்டு பொய் புகார் அளித்ததை தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த அரும்பாவூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.