Anganwadi workers wait struggle. Perambalur MP Parivendar petitioned the Collector in support.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.22 அன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2ஆம் நாள் நடக்கும் போராட்டத்திற்கு வந்த பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற வலியுறுத்துவதாக தெரிவித்த அவர் நியமான கோரிக்கைகளை நிறைவேற்றற வலியுறுத்தியும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை 7வது ஊதியக்குழுவில் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவும், மேலும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு 10 லட்சமும் உதவியாளர்களுக்கு 5லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிய மனுக்களை கலெக்டர் வெங்கடப்பிரியா விடம் கொடுத்து ஊழியர்களின் கோரிக்களை நிறைவேற்ற கேட்டுக் கொண்டார். பின்னர் தொகுதி குறித்த நிலவரங்களை கேட்டறிந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!