Anna Birthday Celebration: Environmental awareness drawing competition in Namakkal
நாமக்கல்லில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.
பசுமை நாமக்கல் மற்றும் சிவா கிரியேஷன்ஸ் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி நாமக்கல்லில் ஷனு ஹோட்டலில் நடைபெற்றது. பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார், பொருளாளர் சிவபிரகாசம், அண்ணா அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், சிவா கிரியேஷன் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி உலகம் புவனேஸ்வரி வரவேற்றார். பசுமை நாமக்கல் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து ஓவியப்போட்டியை துவக்கி வைத்தார். இதில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு மரம் நடுவோம் என்ற தலைப்பிலும், 5,6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் அற்ற நாமக்கல் என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
8,9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கொசவம்பட்டி ஏரி உங்கள் கற்பனையில் என்ற தலைப்பிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பசுமையான நாமக்கல் என்ற தலைப்பிலும் ஆக நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் நாமக்கல் பகுதியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு ஆகியோர் பிறந்த நாள் விழாவில் நடைபெறும், ஓவியப்போட்டியில் பங்கேற்பெறுவர் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.