Anna Marathon Run in Perambalur; Collector Karpagam waved the flag
தமிழ்நாடு அரசு சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
போட்டியில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்பட்டது. மேலும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கி 5 கி.மீ. தூரம் கலந்துகொள்ளும் பெண்களுக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும், 8 கி.மீ தூரம் உள்ள ஆண்களுக்கு தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி வரையிலும், 10 கி.மீ தூரம் உள்ள ஆண்களுக்கு பைப்பாஸ்(சென்னை) வரையிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றிபெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- வீதமும் இரண்டாம் பரிசாக ரூ.3,000/- வீதமும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- வீதமும் நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றிபெறுப்வர்களுக்கு தலா ரூ.1000/-வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே காசோலையாக வழங்கப்படுகிறது.
நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், உள்பட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.