Anna Memorial Day in Perambalur district: ADMK-DMK parties Garland to His Statues

பெரம்பலூரில் பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு, புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது மாவட்ட அமைப்பாளர் ஆர்.துரை, ஒன்றிய செயலாளர் ஆலத்தூர் கர்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, உள்ளிட்ட மாவட்ட மகரளிர் அணியினர், வழக்கறிஞர், தொழிற்சங்கம் உள்ளிட்ட சார்பு அணிகள் மற்றும் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் உள்பட கட்சி பிரமுகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர், மதுரகாளியம்மன் கோவில்களில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ., ஆர்.தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு பணியாளர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து உணவருந்தினர்.
அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு கொடுக்கபட்பட்ட புடவைகளை ஏழை எளிய பெண்கள் சுமார் 200 நபர்களுக்கு வழங்கி, 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது.
இதே போன்று குரும்பலூரில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக மதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.