Anna Memorial Day in Perambalur District: AIADMK sprinkles flowers!
பெரம்பலூரில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக அலுவலகம் முன்புறம் அலங்கரிக்கபட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் சார்பில், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், செல்வக்குமார், ரவிச்சந்திரன், செல்வமணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, நகராட்சி வார்டு வேட்பாளர்கள் சுஜாதா, பரமேஸ்வரி, மற்றும் பாளையம் சரவணன், உள்ளிட்ட மாவட்ட மகரளிர் அணியினர், வழக்கறிஞர், தொழிற்சங்கம் உள்ளிட்ட சார்பு அணிகள் மற்றும் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் உள்பட கட்சி பிரமுகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.