Anna Memorial Day plea to respect Garland to His Statue and Tribute by Perambalur ADMK parties Headed by RT Ramachandiran MLA

பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அண்ணா சிலைக்கு அஇஅதிமுக கட்சியினர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ தலைமையில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது மாவட்ட அவைத்தலைவர் நெய்க்குப்பை ஆர்.துரை, மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட பொருளாளரும், அறங்காவலர் குழுத் தலைவருமான முன்னாள் பூவை.தா.செழியன், மாவட்ட எம்.ஜி.ர் மன்ற செயலாளர் எம்.என். ராஜாராம், ஒன்றிய செயலாளர்கள் என்.கே கர்ணன் (ஆலத்தூர்), என்.சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர்), பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பெரம்பலூர் ஒன்றிய துணை செயலாளர் ஜானகிசின்னசாமி உள்ளிட்ட மாவட்ட மகளிர், வழக்கறிஞர் , தொழிற்சங்கம் உள்ளிட்ட சார்பு அணிகள் மற்றும் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், காடூர் ஸ்டாலின், முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ், கவுள்பாளையம் செல்வக்குமார், பாளையம் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன், மேலப்புலியூர் ஒன்றிய கவுன்சிலர் அருணாபாண்டியன், சொக்கநாதபுரம் ராமஜெயம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சின்ன.ராஜேந்திரன், மகளிரணியை சேர்ந்த தனலட்சுமி, சுஜாதா, உமா உள்பட கட்சி பிரமுகர்கள் மற்றும் பேரூர், கிளைக்கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

கோயில்களில் சமபந்தி விருந்து!!

பெரம்பலூர் மதனகோபலசாமி மற்றும் சிறுவாச்சூர், மதுரகாளியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இன்று மதியம் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறுவாச்சூரில் நடந்த சமபந்தி நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ., ஆர்.தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களுடன் சேர்ந்து உணவருந்தினர். அருள்மிகு மதுரகாளியம்மனுக்கு நேர்த்திகடனாக கொடுக்கபட்பட்ட புடவைகளை ஏழை எளிய பெண்களுக்கு வழங்கி, 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

இதே போன்று குரும்பலூரில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக, மதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், சிலை இல்லாத இடங்களில் அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் அண்ணாவின் படத்தை வைத்து கிராமங்கள் தோறும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!