Anna Memorial Day: Public feast at Siruvachur Madurakaliamman Temple; Perambalur MLA Prabhakaran attended!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவைப் போற்றும் வகையிலும், தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவராற்றிய பணியினை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பொது விருந்து வழங்கிடவும், மேலும் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட துணிகளில் நல்ல நிலையில் உள்ள புடவைகளை ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி எம்.எல்.ஏ பிரபாகரன் தலைமையில் நடந்தது.

இதில், திமுக மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தி, திருக்கோவிலின் சார்பில் வழங்கப்பட்ட புடவைகளை ஏழை எளியவர்களுக்கு வழங்கினர்.

அதனடிப்படையில் மதுரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு பொது விருந்தும் 200 நபர்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் தழுதாழை சி.பாஸ்கர், மற்றும் சிறுவாச்சூர் கிளை பொறுப்பாளர்கள் அழகேசன், வக்கீல் செல்லையா கோவில் தர்மகர்த்தா மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!