Anna Remembrance Day: Peace procession near Perambalur, garlanding the statue and honoring it!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் இன்று காலை முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 55 வது நினைவு நாளை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் அமைதி ஊர்வலம் நடந்தது. அதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜ்குமார், துரைசாமி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என். ராஜேந்திரன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், நல்லத்தம்பி, மருவத்தூர் ராஜேந்திரன், டாக்டர் வல்லவன், மதியழகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், திமுக செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, பூலாம்பாடி நகர செயலாளர் செல்வலட்சுமி சேகர், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், பெரம்பலூர் நகராட்சி துணைத்தலைவர் ஹரி பாஸ்கர், ஆதிதிராவிடர் நலக் குழு சன்.சம்பத், சிறுபான்மை நலக் குழு பொறுப்பாளர் ரினோபாஸ்டின், மாணவரணி கிருஷ்ணா.இள உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட அயலக அணி அமைப்பாளர் எ.ரசூல்அகமது, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணா.இள, தொ.மு.ச.மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார்,தொ.மு.ச. மாவட்ட கவுண்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, வேப்பந்தட்டை மேற்கு பாண்டகப்பாடி கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!