Annai Siddhar Guru Pooja at Elambalur: Annathanam took place.

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷிமலை மகா சித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் முதலாமாண்டு குருபூஜை விழா நடந்தது.

பெரம்பலூர் பிரம்மரிஷிமலை காகபுஜண்டர் ஸ்ரீதலையாட்டி சித்தரின் சீடரான அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் மகா சித்தர்கள் டிரஸ்ட் ஆரம்பித்து பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் ஸ்ரீகாகன்னைஈஸ்வரர் சித்தர் கோயிலை ஸ்தாபித்து, ஆசிரமம், கோசாலை அமைத்து ஆன்மீக பணி மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆடி மாதம் பவர்ணமி நாளான ஆகஸ்ட் மாதம் 3ம்தேதி ஜீவசமாதி அடைந்தார். அவரது முதலாமாண்டு குருபூஜை விழா நேற்று 24ம்தேதி நடந்தது.

மகா சித்தர்கள் டிரஸ்ட் மேலாண்மை இயக்குநர் ரோகிணி மாதாஜி தலைமை வகித்தார், தவயோகிகள் சுந்தர மகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவருட்பா பாராயணம், கோபூஜை, அஸ்வபூஜை, 210 சித்தர்கள் யாகபூஜை, ஸ்ரீகாகன்னை ஈஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை, 500 மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திரதானம், அன்னதானம் போன்றவை நடைபெற்றது.

விழாவில் உசலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், எம்எல்ஏ பிரபாகரன், சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம், அகில பாரதிய சந்யாசிகள் சங்க தலைவர் போரூர் ஆதினம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிவசேனா மாநில கொள்கை பரப்பு செயலாளர் சசிகுமார், தஞ்சை அரண்மனை ராஜா சாம்பாஜி ராஜே போன்ஸ்லே, சிவகாசி அதிபன்போஸ், சன்மார்க்க சங்க தலைவர் சுந்தரராஜன், டாக்டர்கள் சரவணக்குமார், ராஜாசிதம்பரம், வில்லிசை வேந்தர் கருங்குழி கிஷோர்குமார், எளம்பலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டு அன்னை சித்தர் இராஜகுமார் குருஜி திருவுருவ படத்தை திறந்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!