Annai Siddharth’s first Gurupuja festival tomorrow in Perambalur!

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷிமலை மகா சித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் முதலாமாண்டு குருபூஜை விழா நாளை நடக்கிறது.

பெரம்பலூர் பிரம்மரிஷிமலை காகபுஜண்டர் ஸ்ரீதலையாட்டி சித்தரின் சீடரான அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் மாக சித்தர்கள் டிரஸ்ட் ஆரம்பித்து பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் ஸ்ரீகாகன்னைஈஸ்வரர் சித்தர் கோயிலை ஸ்தாபித்து, ஆசிரமம், கோசாலை அமைத்து ஆன்மீக பணி, நோய்ப்பிணி போக்கும் பணி, தான, தர்ம காரியங்கள் செய்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம்தேதி ஜீவசமாதி அடைந்தார். அவரது முதலாமாண்டு குருபூஜை விழா நாளை (24ம்தேதி) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

விழாவையொட்டி திருவருட்பா பாராயணம், கோபூஜை, அஸ்வபூஜை, 210 சித்தர்கள் யாகபூஜை, ஸ்ரீகாகன்னைஈஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை, சாதுக்களுக்கு வஸ்திரதானம், அன்னதானம் போன்றவை நடைபெறுகிறது. விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏ பிரபாகரன், முன்னாள் ஐகோர்ட் நீதிபதிகள் ரகுபதி, வள்ளிநாயகம், திருச்சி தலைமை நீதிபதி கருணாநிதி, ஐஏஎஸ் அதிகாரி உமாமகேஸ்வரி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பெருமாள், ராஜேந்திரன், ஐபிஎஸ் அதிகாரிகள் துரைகுமார், ஹரிசேகரன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினி மாதாஜி, இயக்குநர்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், ராதா ஆகியோர் செய்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!