Anna’s Birth Anniversary: Bicycle Competition for Students: Perambalur MLA Prabhakaran inaugurated.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் அரசு சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு சைக்கிள் போட்டியினை எம்.எல்.ஏ பிரபாகரன், டி.ஆர்.ஓ அங்கையற்கண்ணி முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் வாலிபால் சங்க தலைவர் பொறியாளர். பரமேஸ்வரன் மாவட்ட சேர்மன் சி.ராஜேந்திரன் கலந்து கொண்டார்.

விளம்பரம்:

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் 13 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 5 கி.மீ, 15 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 7 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 9 கி.மீ. தூரமும் என வெவ்வேறு பிரிவுகளில் சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது.

இதில் 13 வயதிற்குட்பட்ட பிரிவில் 27 மாணவர்கள், 13 மாணவிகளும் , 15 வயதிற்குட்பட்ட பிரிவில் 63 மாணவர்கள், 24 மாணவிகளும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் 70 மாணவர்கள், 21 மாணவிகள் என மொத்தம் 218 மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதமும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் நான்கு முதல் பத்தாம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 ரொக்க பரிசு தொகை 15.09.2022 அன்று நடைபெறும் விழாவின் போது வழங்கப்படுகிறது. நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!