Another house burglary in Perambalur with black ink on CCTV camera!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள தங்கம் நகரை சேர்ந்தவர் முத்தையா (63), இவரது மனைவி அடைக்கம்மை. இவர்களுக்கு மகன்கள் சுப்பிரமணியன், பழனியப்பன் ஆகியோர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். முத்தைய்யாவும், அவரது மனைவி அடைக்கம்மையும் பிப்.24. ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு காசிக்கு சென்று விட்டனர்.
தினமும் வீட்டிற்கு வந்து வீட்டில் முன்பு உள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டு செல்லும் வேலையை மகாலட்சுமி இன்று மதியம் வந்து பார்த்த போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்தை பார்த்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். முத்தையாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது , வீட்டில் உண்டியல் பணம் ரூபாய் 5000 யிலிருந்து 10,000 க்குள் இருக்கும் என தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்திய போது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கருப்பு கலர் ஸ்பிரே அடிக்கப்பட்டு இருப்பதும், வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான டி.வி.ஆர். யையும் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. தடய அறிவியல், மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை வைத்து அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நூதன திருடர்கள் பெரம்பலூர் நகரில் இன்று மட்டும் 3 இடங்களில் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.