Anti-bribery police raid at Perambalur RTO office: unaccounted money seized!
பெரம்பலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர், திருச்சி – சென்னை தேசியநெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தலில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.
பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி உள்பட போலீசார் 7 பேர் இன்று மதியம் 3 மணியளவில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை பூட்டினர். பின்னர் ஆர்.டி.ஓ கணேசன், பிரேக் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், அலுவலக ஊழியர்கள், அலுவலகத்திற்குள் இருந்த புரோக்கர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் வைத்திருந்த பணத்திற்கு கணக்கு காட்டாத 8 புரோக்கர்களிடமிருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இரவு 9மணி வரை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யாரும் புகார் கொடுத்து இந்த சோதனை நடைபெறவில்லை. இந்த சோதனை வழக்கம் போல் நடைபெறுவது ஒன்றுதான் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.