Anti-liquor campaign in Perambalur: Collector V. Santha inaugurates

பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் இன்று காலை கலால் சார்பில் மது பானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான (போதை) விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதனை கலெக்டர் வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட பேரணி காமராஜர் வளைவு, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம் வழியாக புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சியை வந்தடைந்தது. இந்தப் பேரணியில் பெரம்பலூர் சுற்றுப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி – கல்லூரிகளை மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியில் மது மற்றும் போதை வஸ்துக்களை பயன்படுத்துவதால் ஏற்படுத் பாதிப்புகளையும், உடல், மனம், குடும்ப மற்றும் சமுதாய சீர்கேடுகள் குறித்த வாசங்கள் அடங்கிய பதாகைகளையும், கோசங்களையும் எழுப்பியவாறு சென்றனர். பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், போக்குவரத்து போலீசார் மாணவர்களின் பேரணிக்கு போக்குவரத்து சீர் செய்தும் கொடுத்தனர். ஆனால், மாணவர்கள் சுமார் ஒரு மணி நேரம் கால் கடுக்க காத்து நின்றனர். மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு செய்யும் அரசே விற்பனையும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!