ஊரகப் பகுதி மாணவ-மாணவிகளுக்கான திறனாய்வுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – முதன்மைக்கல்வி அலுவலர்
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :
2016-ல் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் தொடர்ந்து 9ஆம் வகுப்பில் மாணவ – மாணவியருக்கான திறனாய்வுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் 01.08.2016 முதல் 08.08.2016 வரை வரவேற்கப்படுகின்றன.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் பெற்றோர் (அ) பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமானச் சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ – மாணவியர்கள் தேர்விற்கான கட்டணமாக ரூ.5-ம், சேவைக்கட்டணமாக ரூ.5ம் ஆகமொத்தம் ரூ.10-வீதம் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியரிடம் கொடுக்கவேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 8.8.2016.
பெரம்பலுhh; மாவட்டத்தில் தேர்ச்சி பெறும் மாணவ – மாணவியர்களில் 100 நபர்களுக்கு (50 மாணவகள், 50மாணவியர்கள்) 9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000 -வீதம் வழங்கப்படும்.
நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ – மாணவியர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.
மேலும் விவரங்களுக்கு http://www.tndge.in, என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.