Apply and get new connections like drinking water in Perambalur Municipality; Commissioner Ramar announcement!
பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் ராமர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை புதிய இணைப்பு வேண்டுவோர் மற்றும் குடிநீர் குழாய் பழுது, பாதாள சாக்கடை இணைப்பு பழுது சீரமைப்பு செய்தல் தொடர்புடைய சேவைகளை தேவைப்படுவோர் நேரடியாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்து உரிய கட்டணத்தொகை செலுத்தி நகராட்சி பணியாளர்கள் மூலம் இணைப்பு வேலைகள் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாறாக நகராட்சியின் அனுமதியின்றி தாங்களாகவோ அல்லது வெளி நபர்கள் துணையோடோ இணைப்பு வேலைகள் செய்வது சட்டப்படி குற்ற செயலாகும். மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் ராமர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.