Apply for Jeevan Raksaksha Medal Awards; Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசின் சார்பாக பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் பிரிவுகளில் ஜீவன் ரக்சக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சர்வோத்தம் ஜீவன் ரக்சக்ஷா பதக்கம் – மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
உத்தம் ஜீவன் பதக்கம் – துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
ஜீவன் ரக்சக்ஷா பதக்கம் – தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான ஜீவன்ரக்சக்ஷா பதக்க விருதிற்கு https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் அல்லாது நேரிலோ அல்லது வேறு இணையதளங்களிலோ விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்புகள் இன்றி நிராகரிக்கப்படும்.
மேற்காணும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 25.06.2024 மாலை 5.00 மணி ஆகும்.
எனவே, மேற்காணும், ஜீவன் ரக்சக்ஷா பதக்க விருதுகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சாதனைகள் புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 74017 03516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.