Appointed A. Kaliaperumal as Chairman of Perambalur District Board of Trustees!

பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக வேலூரை சேர்ந்த ஆ.கலியபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகம் மூலம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு இந்து சமைய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ-ன் கீழ் பெரம்பலூர் வருவாய் மாவட்டங்களின் எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46 (111) ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களை தவிர மற்ற சமய அறநிறுவனகளுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தலைவர் மற்றும் 4 உறுப்பிர்களை கொண்ட மாவட்ட குழுக்களை அமைத்து அரசாணைகள் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக வேலூரை சேர்ந்த கலியபெருமாள், உறுப்பினர்களாக சண்முகம், ராமச்சந்திரன், பாஸ்கர், கோகிலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பார்கள். இக்குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கலியபெருமாள் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் சகோதரர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில்கள் கட்டவும், புணரமைக்கவும், ஏராளமான நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!