Appreciation ceremony for state-school teacher who retired near Namakkal!
நாமக்கல் மாவட்டம், முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் ஆசிரியர் சரவணமுத்து பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெற்றது.
அவருக்கு நாமக்கல் மாவட்ட முதுகலை வணிகவியல் ஆசிரியர்களின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி முதுகலை வணிகவியல்ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.