Appreciation for the Namakkal students who won in the National Athletic Championship
தேசிய வில்விகத்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி பாராட்டினார்.
இந்திய ஊரக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரில் உள்ள ஜம்மு பல்கலைக்கழக்த்தில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வில்வித்தை வீரர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7-ஸ்டார் ஆர்சரி கிளப் மாணவர்கள் ஊரக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயற்தலைவர் கேசவன் தலைமையில் கலந்துகொண்டனர். இதில் பரத் 14 வயதிற்குட்பட்டோர் ரீகர்வு பிரிவில் தங்க பதக்கமும்,சங்கீர்த்தன் 17 வயதிற்குட்பட்டோர் இந்தியன் பிரிவில் தங்க பதக்கமும், விமந்தன் 17 வயதிற்குட்பட்டோர் ரீகர்வு பிரிவில் தங்க பதக்கமும், அபிஷேக் 17 வயதிற்குட்பட்டோர் காம்போன்டு பிரிவில் தங்க பதக்கமும், பிரசன்னாகுமார் 19 வயதிற்குட்பட்டோர் ரீகர்வு பிரிவில் தங்க பதக்கமும் பெற்றனர். பதக்கங்களை வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் கண்ணன் ஆகியோரை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு பாராட்டி பரிசுகள் வழங்கினார்.