Apr. 21 inputs by farmers to not declare all the relevant documents submitted to obtain relief

பெரம்பலூர் : 2016 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்ட வறட்சியை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களும் வறட்சி மாவட்டமாக அரசால் அறிவிக்கப்பட்டு விவசாயிகளால் பயிரிடப்பட்ட பயிர்கள் 33 சதவீதத்திதிற்கு மேல் மகசூல் பாதிப்பு எற்பட்ட விவரம் குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளால் அளிக்கப்பட்ட ஆவனங்களின் பேரில் கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரால் கணக்கெடுப்பு செய்து சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் 79,219 விவசாயிகளுக்கு 49.81 கோடி மதிப்பளவில் அரசால் அறிவிக்கப்பட்ட இடுபொருள் நிவாரணம் இம்மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பயிர்கள் சேத விபரம் குறித்து கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரால் கணக்கெடுப்பின் போது விடுபட்ட விவசாயிகளும், பயிர்கள் சேதமடைந்தமைக்கு சிட்டா, ஆதார் அட்டை , வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் ஒளி நகலினை சமர்ப்பிக்காத விவசாயிகளும், இடுபொருள் நிவாரணம் பெற ஏப். 21 தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவுடன் மேற்கூறிய ஆவணங்களை அளித்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!