Aptitude Olympiad for class 2 to 10 students: held at Siruvachur Almighty Vidyalaya School!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஒலிம்பியாட் எனும் பள்ளி மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நடந்தது. 2ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முன் பதிவு செய்து தேர்வில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தாளாளர் முனைவர் ஆ.ராம்குமார் பள்ளி முதல்வர் ஹேமா, தேசிய பாரா ஒலிம்பிக் கூட்டமைப்பு மாநில தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் தேர்வு மையத்தை ஆய்வு செய்தனர். தேர்வில் 95 சதவிகிதம் மதிப்பென் பெறும் முதல் நபருக்கு ஆண்ட்ராய்டு எல்இடி டிவியும், வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் பெறுபவருக்கு டிக்ஸ்னரியும், இரண்டாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஸபோர்ட்ஸ் வாட்ச், பரிசாக வழங்கப்படும்.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டு 16.4.2023 அன்று பள்ளி வளாகத்தில் பரிசுகள் வழங்கப்படும். தேர்விற்கு குழந்தைகளை அழைத்து வந்திருந்த பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி துணைத் தலைவர் சி.மோகனசுந்தரம், சங்கீதா கோபிநாத் துணை முதல்வர் சந்திரா ஆசிரியர்கள் சந்திரோதயம், ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.