Aranarai School Independence Day Competition! Councilor Durai.Kamaraj gave the prizes!!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கட்டுரை, ஓவியப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற, கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் மற்றும் விருதுகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, பெரம்பலூர் நகராட்சி 17வது வார்டு உறுப்பினர் துரை. காமராஜ் வழங்கினார். மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட ஆலோசகர், தன்னம்பிக்கை பயிற்றுநர் செ.வைரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை உமாவதி வரவேற்றார். ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.