Are there adequate drinking facilities for deer in Perambalur district forest? As collector inspection!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்பாவூர் காப்புக் காட்டில் உள்ள மான்களுக்கு போதிய குடிநீர் வசதி உள்ளதா என கலெக்டர் கற்பகம் இன்று ஆய்வு செய்தார்.

வெண்பாவூர் காப்புக்காட்டில் மான்கள் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுவதால் மான்களுக்கு தேவையான குடிநீர் சேமித்து வைக்க போதுமான குட்டைகள் உள்ளதா என்பது குறித்தும், மான்கள் காட்டை விட்டு தண்ணீருக்காக வெளியே வரும் நிலை இல்லாமல் போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், காப்பு காட்டில் புதியதாக எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என்பது குறித்தும்

721.18 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த காப்புக்காட்டில் புதியதாக வேம்பு, புங்கன், நீர்மருது, நாவல், இலுப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 2,500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்டில் மான்கள் அதிகமாக வசித்து வருவதால் மான்கள் குடிநீர் அருந்தும் வகையில் 1 குடிநீர் குட்டை, தண்ணீரை சேமித்து வைக்க 14 தடுப்பணைகள், 5 கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல 368.96 ஹெக்டர் பரப்பளவில் உள்ள மாவிலங்கை காப்புக்காட்டிலும் 2500 மரக்கன்றுகள் நடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த காப்புக்காட்டில் வன விலங்குகள் தண்ணீர் பருக ஒரு குட்டை, 9 தடுப்பணைகள், 3 கசிவுநீர் குட்டைகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர்கள் உள்படஅரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!