Area coordinator work; Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் க. கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் பணிபுரிய கீழ்க்காணும் பதவிகளுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் : காலியிடம் 10 எண்ணிக்கை, வட்டார ஒருங்கிணைப்பாளருக்கான தகுதிகள்: ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கணினியில் 6 மாத கால சான்றிதழ் MS OFFICE பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு 28-க்குள் இருக்க வேண்டும்; இத்திட்டம் தொடர்பான பணிகளில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்புடைய வட்டாரத்திற்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்: ரூ. 12000/- (மாத ஊதியம்),
மேற்காணும், தகுதிகளையுடைய விண்ணப்பதாரர்கள் “திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் என்ற முகவரியில், 20.02.2023 மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 20.02.2023 அன்று மாலை 5.00 மணிக்கு பின்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது என தெரிவித்துள்ளார்.