Argument near Perambalur: One beaten to death, another admitted to hospital with serious injuries!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமத்தில் பூர்வீக சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், துரையப்பா என்பவரின் கலியமூர்த்தி(56), என்பவருக்கும் அவரது சகோதரர் ராமையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கலியமூர்த்தியை அவரது அண்ணன் ராமையா அடித்து கொலை செய்து விட்டார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, கொலையாளி ராமையா காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக தகவலறிந்த வி.களத்தூர் போலீசார் கலியமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூர்வீக சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில், முதியோர் ஒருவர் அவரது சகோதரரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாண்டகப்பாடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.