Ariyalur student Anita committed suicide in the Supreme Court against the NEET Exam
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்தூறை குழுமூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மாணவியின் தந்தை கூலித் தொழிலாளி. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி வேலை பார்த்து வந்தார். அனிதாவுக்கு மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக இருந்தது. அனிதா 196.5 கட்டாப் மதிப்பெண் பெற்றிருந்தார்.
நீட் தேர்வில் 720 க்கு 86 மதிப்பெண் எடுத்ததால் மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவர்களில் அனிதாவும் ஒருவர் ஆவார். மருத்துவபடிப்பில் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதால் அனிதா மன உளைச்சலில் இருந்து உள்ளார். அனிதாவின் மரணம் அவரது பெற்றோர்கள் நண்பர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீயூஸ் 18 தொலைக்காட்சிக்கு டெல்லியில் அளித்த பேட்டி :