Around Rs 4 crore worth of free bicycles in Perambalur; MLAs were offered to students

மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தலைமையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் +1 மற்றும் +2 பயிலும் 9667 மாணவ-மாணவிகளுக்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன், ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர்
வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான, ஆர்.டி.இராமச்சந்திரன் பேசியதாவது:

மக்களால் நான், மக்களுக்காக நான் என வாழ்ந்து மக்கள் மனதில் இன்றும், என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் மாதரசி அம்மா அவா;களின் எத்தனையோ, மக்கள் நலத் திட்டங்களில் மகத்தானது இந்த விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டமாகும். இன்றைக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை ஏதோ வாக்குக்காக அரசு அளிப்பதாக ஏளனமாக சித்தரிக்கின்றனர்.

தனக்கு இல்லாவிட்டாலும், தன் குழந்தையாவது சாப்பிட வேண்டும் என்று எண்ணி தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவாh;கள் என்று எண்ணியே கா;ம வீரா; காமராஜா; அவா;கள் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அது சத்தான உணவாக இருக்கவேண்டும் என்று எண்ணிய புரட்சித்தலைவர், அதை சத்துணவாக விரிவுபடுத்தினார்.

அரசை மட்டுமே நம்பி வாழக்கூடிய ஏழை எளிய மக்களுக்கும், எல்லாமும், எல்லோரும் பெறவேண்டும் என்று மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் மக்கள் நலத் திட்டங்களை வெகுவாக அமுல்படுத்தினார்கள். அதனைத்தொடர்ந்தே தற்பொழுது நடைபெறும் அரசும் அம்மா வழியில் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறது.

பெண்ணாக பிறப்பதுவே பாவம் என்று வாழ்ந்த நிலை மாறி பெண்ணால் முடியும் என்ற நிலையை பெண்கள் அடைய அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் ஒரு சமுதாயம் மேம்பட்டதாக அமைய அது கல்வியில் மேம்பட்டு இருக்கவேண்டும் என்று எண்ணிய அம்மா இந்த விலையில்லா மிதிவண்டி முதல் புத்தகம், பை மற்றும் பணக்காரா;களும், தொழிலதிபர்களும் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றிருந்த கணினியையும் குடிசையில் உள்ள மாணவனும் பெற்று இவ்வுலகத்தை காணச் செய்தார்.

பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்றைக்கு கல்வித் துறையை மேம்படுத்த புதியதாக பல திட்டங்களை அதிரடியாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அப்துல்கலாம் அய்யா அவர்கள் குறிப்பிட்டதை போல ஒரு மனிதன் மூச்சு விடுவதை நிறுத்தி விட்டால் மட்டும் மரணமல்ல. முயற்சியை கைவிட்டாலும் அதுவும் மரணமே .

மேலும், ஒரு மனிதனின் பிறப்பு என்பது சம்பவமாக இருக்கலாம். ஆனால் அவனது மரணம் என்பது சரித்திரமாக இருக்கவேண்டும் என்றார். இதனை மாணவர்கள் தங்களது மனதில் நிறுத்தி வாழ்வில் சிறப்பான நிலையை அடையவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தொpவித்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா. தமிச்செல்வன் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். குறிப்பாக விலையில்லா பாடநுhல், நோட்டு புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை, புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, உள்ளிட்ட 14 வகையான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தி வருகின்றார்கள். அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டமாகும்.

கிராமபுறத்து மாணவ-மாணவிகள் தொலைதூரம் நடந்தே சென்று கல்வி கற்கும் நிலையினை மாற்றி அவர்களுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கி வருகின்றது தமிழக அரசு. நமது பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும், கல்வித்துறைக்கென்று எண்ணற்ற சிறப்புத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியிருக்கின்றது. வேப்பந்தட்டையில் இருபாலருக்கான புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி, வேப்பூரில் பெண்களுக்கான கலை அறிவியல் கல்லூரி, மாவட்ட அளவிலான மற்றும் ஒன்றிய அளவிலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பல்வேறு திட்டங்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாது தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுப்பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களையும், புதிய அரசுப்பள்ளிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் நமது பெரம்பலூர் மாவட்டத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த மாதிரிப் பள்ளி அமையவும் தற்போது நடைபெறும் அம்மாவின் ஆட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் , நானும் இதே அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி அமையவும் முயற்சி எடுத்து, இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் ஓர் மரம் வளர்க்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 10 மரங்களாவது வளர்க்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசின் இதுபோன்ற திட்டங்களை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி பேசியதாவது:

உறுதியான உடலும், நல்ல உள்ளமும் நல்ல பயிற்சியின் வாயிலாகவே நமக்கு கிடைக்கப் பெறும். அத்தகைய ஒரு பயிற்சி சைக்கிள் ஓட்டுவதில் கிடைக்கிறது. இதை ஓர் பழக்கமாக நாம் பின்பற்ற வேண்டும். அரசின் நோக்கமும், ஆரோக்கியமான சமுதாயமே. அவ்வகையில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் மிகுந்த பயனளிப்பதாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் எல்லா நலமும் பெற்று ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.பாண்டியன், முதன்மைக்கல்வி அலுவலர் கு.அருள்அரங்கன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) அம்பிகாபதி உள்ளிட்ட அலுவலர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!