முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு 680 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் அற்புதா மருத்துவமனை சார்பில் பெரம்பலூர் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவமுகாம் இன்று நடைபெற்றது.
.அதில் கழுத்தில், தைராய்டு கட்டி, கர்ப்பப்பை புற்று நோய், சிறுநீரக கோளறுகள், எலும்பு மூட்டு , பித்தப்பை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இரைப்பை, பித்தப்பை, கணையம், கல்லீரல்களுக்கான கட்டிகள் ஆகியவைகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இலவச பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகளுடன் மருந்து மாத்திரைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டது.
அற்புதா மருத்துவ மனையின் இயக்குநர் மருத்தவர். சாமுவேல் தேவக்குமார் தலைமையில் மருத்துவர்கள் ஸ்டெல்லா சாமுவேல்தேவக்குமார் ரேகா, ஜீவஊற்று, ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.