Arrangements for the public to Write free petition; Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட் கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீற்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருகிறார்கள். பொதுமக்களின் வசதிக்காக மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் இலவசமாக மனு எழுதிக்கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இடது புறம் உள்ள அரங்கில் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இலவசமாக மனு எழுத ஒதுக்கப்பட்டுள்ள அரங்கிற்கு வந்து தங்களது கோரிக்கைகளை அங்கு மனு எழுதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நபர்களிடம் கூறி
மனுக்களாக பெற்றுக்கொண்டு, அம்மனுக்களை பதிவு செய்தபின்னர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கலாம். மனுக்களை எழுதுவதற்கு யாரிடமும் எந்த கட்டணமும் வழங்க தேவையில்லை. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இலவச சேவையாக செய்யப்படுகின்றது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்த கலெக்டர் கற்பகத்தை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!