Arrested those who protested to come to the constituency showing black flag and asking the minister to go back!
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தனது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தொகுதியில் இன்று, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.19.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து, மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
பின்னர், அத்தியூரில், ஆதிதிராவிடர் மகளிர் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினை தொடங்கி வைத்து பால் பரிசோதனை கருவிகள் ரூ.40,000 மதிப்பீட்டிலும், பால் கேன்கள் ரூ.30,000 மதிப்பீட்டிலும், ஓராண்டுக்கான பணியாளர்கள் ஊதியம் ரூ.28,800 மற்றும் இதர பணிகளுக்கான ஊதியம் ரூ.1200 என மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் முழு மானியத் தொகை வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.
துங்கபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், கீழப்புலியூர் சிலோன் காலனியில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்த மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், கீழப்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் பெரம்பலூர் முதல் எழுமூர் வரை கூடுதல் பேருந்து சேவையினையும் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணியினையும், ரூ.57.00 லட்சம் மதிப்பீட்டில் ஜமாலியா நகர் பூங்கா அமைக்கும் பணியினையும், ரூ.6.29 கோடி மதிப்பில் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டு பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மேலும் பேரூராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும், துப்புரவு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அரும்பாவூர் பேரூராட்சிக்கு 04 மின்கல வாகனமும், குரும்பலூர் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு தலா 1 வாகனமும், பூலாம்பாடி பேரூராட்சிக்கு 02 வாகனமும் என மொத்தம் 8 வாகனங்கள் ரூ.12.32 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்.
இதில், பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் உள்ளிட்ட வருவாய், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.இராஜேந்திரன், போக்குவரத்து துறை திருச்சி மண்டல பொது மேலாளர் சக்திவேல், மாவட்ட மேலாளர்கள் சதீஷ்குமார், திரு.ராமநாதன், வேப்பூர் ஊராட்சி யூனியன் பிரபா செல்லப்பிள்ளை, முத்துலட்சுமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் .கருணாநிதி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (திருச்சிராப்பள்ளி மண்டலம்) காளியப்பன், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாஹிர் உசேன், செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், செல்வகுமார், முன்னாள் சேர்மன் அழகு.நீலமேகம், பொதுக்குழு உறுப்பினபர் பட்டுச்செல்வி ராஜேந்திரன் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, லப்பைக்குடிக்காட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார், அமைச்சர் சிவசங்கர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஒரு அமைப்பினர் கருப்பு காட்ட இருப்பதாக வந்த தகவலின் பேரில், டி.எஸ்.பி ஜனனிபிரியா தலைமையில் போலீசார் தெருவிற்கு தெரு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு கருதி முன்கூட்டியே 7 பேரை கைது செய்து பாதுகாப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில், அமைச்சர் சிவசங்கர் லப்பைக்குடிக்காடு பேருந்து நிலையம் அருகே புறப்பட முயன்ற போது, பலத்த பாதுகாப்பையும் மீறி. (Go Back Sivasankar) கோ பேக் சிவசங்கர் என கருப்பு கொடிகளை காட்டி லப்பைக்குடிக்காட்டில் இருந்து 17 கிராமங்களுக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என 7 பெண்கள் உள்பட 23 ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோசமிட்டனர். அவர்கைள போலீசார் கைது செய்து வேினல் ஏற்றி சென்றனர். பின்னர், அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தர். அரை திமுவினர் தாக்க முயன்றனர். அவரை மீட்ட போலீசார் பாதுப்பு செய்தனர்.
தேர்தல் நேரத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அப்போது கொடுத்த வாக்குறுதி தற்போது அமைச்சர் சிவசங்கருக்கு தலைவலியாக மாறி உள்ளது, அப்போது முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆர்டி.ராமச்சந்திரன் வாக்குகள் சேகரித்த போது, குடிநீர் திட்டத்தை நிறுத்த வாய்ப்பில்லை, என உண்மையை பேசினார். அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பகுதி மக்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும், அரசு அதிகாரிகள் சாலைகள், நீர்நிலைகள் எவருக்கும் சொந்தமானது அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.