Art competitions for youth on behalf of the Department of Arts and Culture! Perambalur Collector Notification!

தமிழ்நாட்டில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி, புதிய மதனகோபாலபுரம், 4-வது குறுக்குத்தெரு, என்ற முகவரியில் 09.03.2024 அன்று ஒவியம் மற்றும் கிராமிய நடனம் போட்டிகளும் 10.03.2024 அன்று குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் போன்ற போட்டிகளும் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.

குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், போன்ற கருவி இசைப்போட்டியிலும் தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், பிரிவுகளிலும் இசையினை முறையாக பயின்றவர்கள் பங்கு பெறலாம்.

பரதநாட்டிய பிரிவில் ஒரு மார்கம் தெரிந்தவர்கள் பங்கு பெறலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், , மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலைமக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். அனைத்து போட்டிகளிலும் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை. அதிகபட்சம் 05 நிமிடம் மட்டுமே நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத்தாள்கள் வழங்கப்படும் .அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வரவேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரைய வேண்டும். அதிகபட்சம் 03 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.

இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.6,000, இரண்டாம் பரிசு ரூ.4,500 மூன்றாம் பரிசு ரூ.3,500 வழங்கப்படும். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு 9443377570 என்ற மாவட்ட அரசு இசைப்பள்ளி தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!