Arumbavoor, Perambalur district, 24-hour sale of alcohol in an alley shop: Demanding to stop, people suddenly block the road!
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் சந்து கடை மது விற்பனையை தடுக்க கோரி, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சிஉள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலக்கரை பகுதியில் 2 அரசு மதுபான கடை இருந்தது. அதனை, பொதுமக்கள் கோவில் மற்றும் பள்ளிக்கூடம் அருகில் இருப்பதை காரணம் காட்டி அங்குள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று , டாஸ்மாக் நிர்வாகம் அரும்பாவூரில் இருந்த 2 மதுபான கடைகளையும் மூடி விட்டது. அதன் பிறகு ஊருக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் மதுபான கடைகளை திறக்காமல் இருந்தனர். இதனை சாதமாக பயன்படுத்தி கொண்ட அரசியல்வாதிகள் அரும்பாவூரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், 2 சந்துக்கடைகள் வீதம் 20 கும் மேற்பட்ட சந்து கடைகளை திறந்து மது ஆறாக பாயவிட்டனர்.
குடும்பப் பெண்கள் பலரும் இதனால், பெரிதும் பாதிப்பு அடைந்ததால், இன்று காலை ஆத்திரம் அடைந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை ஒன்று திரண்டு அரும்பாவூர் பாலக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழக அரசும், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து, அரும்பாவூர் பகுதியில் சந்து கடை இல்லாமல் முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
அரும்பாவூரில், 24 மணி நேரமும் மதுப்புட்டிகள் கிடைப்பதால் மதுப்பிரியர்கள், வாங்கி குடித்து விட்டு குடும்பத்தில் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே மதுபான கடைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என கோரிக்கையாக முன் ழவத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு சந்து கடைகளை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் சம்பவத்தால், அரும்பாவூர்- பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் அளவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.