அரும்பாவூர் அருகே விவசாயின் கூரை வீடு எரிந்து சாம்பல். ஆடும் தீயில் கருகி இறந்து பலியானது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையை சேர்ந்தவர் ஜெயமேரி ( வயது 60 ). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று மதியம் ஜெயமேரியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீ மேலும் பரவாமல் தீயை அணைத்து தடுத்து . அப்போது வீட்டின் அருகில் கட்டியிருந்த வெள்ளாடு தீயில் கருகி உயிரிழந்தது. மேலும் வீட்டிலிருந்த கிரைண்டர், மின்விசிறி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.