Arumbavur panchayat demonstration condemning the Tamil Nadu Farmers Association
அரும்பாவூர் பேரூராட்சியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமையில் கண்ட ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், அரும்பாவூர் பேரூராட்சியில் 4வது வார்டில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் அருகில் உள்ள சாகுபடி நிலங்களில் திருப்பி விடப்படுவதாகவும், இதனால் இரண்டு கிணறுகள், 25 ஏக்கர் நிலங்கள் பாழாகிவிட்டதாகவும், அதனை மறுசீரமைப்பு செய்ய பேரூராட்சி நிர்வாகம் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஞானசேரன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர். விவசாயிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.