Arun Nehru became Perambalur MP!
தற்போது நடைபெற்ற பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திமுக வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் தொகுதிக்கான எம்.பி ஆகிறார்.
அருண்நேருவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பாஜக வேட்பாளார் பாரிவேந்தர் ஆகியோர் பின்னடைவு சந்தித்து வருகின்றனர். இதனால், பெரம்பலூர் தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றி உள்ளது. இது திமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மத்தியில் பிஜேபி முன்னிலையில் இருந்து வருவதால், வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது தொடர்ந்து 5 ஆண்டுகள் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.