Arvindhan takes over as regional commander of Perambalur Home Guard Force!
பெரம்பலூர் மாவட்ட ஊர்க் காவல் படை மண்டல தளபதியாக வள்ளலார் அரவிந்தன் பொறுப்பேற்று கொண்டார்.
பெரம்பலூரை சேர்ந்த ஜெயபாலன் மகன் வள்ளலார் அரவிந்தன் (50). இவர் பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஊர்க்காவல்படை அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர் பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை என 14 ஆண்டுகள் தொடர்ந்து ஊர்க் காவல் படை மண்டல தளபதியாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.