As if asking for directions near Perambalur, the mysterious men stole the gold thali necklace from the woman!

கற்பனை காட்சி
பெரம்பலூர் அருகே உள்ள கீழபுலியூர் கிராமத்தை சேர்ந்த ராமநாதன். இவரது மனைவி ஆபரணம் ( வயது சுமார் 55) . விவசாயம் செய்து வருகின்றனர். காலை மாடுகளை வயலுக்கு அழைத்து சென்றவர், இன்று மாலை மீண்டும் வீட்டிற்கு மாடுகளை பிடித்துக் கொண்டு தடத்தில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கு பைக்கில் கைலியுடன் வந்த நபர் பீல்வாடிக்கு எப்படி போக வேண்டும் வழி கேட்டுவிட்டு, ஆபரணம் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சரடை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அக்கிராமத்தில், பெண் விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.