பெரம்பலூர் மாவட்டத்தில் பிப்.1 ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் இயங்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்ககைக் குழு (ஜாக்டோ) 30.01.2016, 31.01.2016 மற்றும் 01.02.2016 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதில் பள்ளி வேலை நாளான 1.2.2016 திங்கள்கிழமை அன்று அனைத்து அரசுப்பள்ளிகளும் வழக்கம்போல் நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், கற்கும் பாரதம் ஆசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் பள்ளிகள் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளார்.