Assistant Jobs in Perambalur District Cooperative Societies : Collector Information!
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள, உதவியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஏதுவாக பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 10.11.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே 01.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்து தேர்வு 24.12.2023 அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.
இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-2024-ஆம் ஆண்டு நேரடி யிற்சி, அஞ்சல் வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணைதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பபிக்கலாம். முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை.
மேலும், இது தொடர்பான விரிவான விவரங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் www.drbpblr.net வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.